அகில இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மடவளை கிளை வத்துகாமம் மீகம்மன என்ற இடத்தில் உள்ள மகளிர் சிறுவர் காப்பு நிலைய சிறுமிகளுக்கு 65 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்னதானமும் பரிசுப் பொருட்களும் வழங்கி அவர்களை கௌரவப்படுத்தியது.
இவ் வைபவத்தில் மவ்லவி எம்.இஸட்.எம். பாஸிர்(இஸ்லாஹி) மற்றும் மீகம்மன ரஜ மஹா விஹாராதிபதி மானிங்கமுவே பியதிஸ்ஸ தேரர் ஆகியோர் உற்பட பலர் கலந்து உரையாற்றினர்.
இங்கு உரையாற்றிய மீகம்மன ரஜ மஹா விஹாராதிபதி மானிங்கமுவே பியதிஸ்ஸ தேர்ர தெரிவித்ததாவது,
மனிதர்களும் மிருகங்களும் கோட்பாட்டு ரீதியாக ஒத்த தன்மையை கொண்டவர்களாக உள்ளனர். மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் உணவு மற்றும் சில உணர்வுகளும் பொதுவானவைகளாகும்.
ஆனால் மனிதர்கள் ஆடை அணிகின்றனர். மிருகங்கள் அவ்வாறல்ல. இன் நிலையில் மனிதன் தனது அறிவைக் கொண்டு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளான். எனவே அறிவின் காரணமாக உயர் நிலையில் காணப்படும் மனிதன் தன்னிடமுள்ள அதிகரித்த வளத்தை இல்லாதவர்களுக்கு கொடுப்பதன் மூலம் ஒரு சமநிலத் தன்மையை ஏற்படுத்தி மேலும் உயர்ச்சி அடைகிறான்.
எனவே பிறருக்கு உணவளித்தல் என்பது மிகவும் சிறந்த பன்பாகும் என்றார்.
இங்கு மவ்லவி பாஸிர் தெரிவித்ததாவது,
இஸ்லாமிய மூலாதாரமான குர்ஆனில் பின் வருமாரு தெரிவிக்கப்பட்டுள்ளது. 'உங்களில் ஒருவரை ஒருவர் வேறுபடுத்தி அறிந்து கொள்ளவே குலங்கலாகவும், கோத்திரங்கலாகவும் குடும்பஙகலாகவும் இனங்கலாகவும் படைத்துள்ளோமே ஒழிய பயபக்தியுடன் நற்கிரிகைகள் புரிவோரே உயர்ந்தவர்கள்' எனக் கூறப்பட்டுள்ளது.
ஆகவே எங்களில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் யார் என்பதை எமது செயல்கள் மூலமே தீர்மானிக்கபடுகின்றன என்றார்.
இங்கு பெருமளவு முஸ்லிம் மாதர்களும், மடவளை பஸார் ஜமாஅதே இஸ்லாமி உறுப்பினர்கள் பலரும் பங்கு கொண்டதோடு சுமார் 100 சிறுமிகளுக்கு அவர்கள் அன்பளிப்புகளையும் வழங்கினர்.
The Event Featured on Madawalanews.com
The Event Featured on Madawalanews.com
No comments:
Post a Comment